Sunday, September 21, 2008
ரயில் பயணங்களில்....
நீங்கள் இதுவரை எத்தனையோ முறை ரயிலில் பயணம் செய்திருப்பிர்கள், சில இனிய உறவுகளுடன் (மனைவி, குழந்தைகள், நட்பு, காதல் என).... நானும் தான்!
என் தந்தையுடன் இறுதியாக நான் மேற்கொண்ட அந்த ஒரு ரயில் பயணம் பற்றிய அனுபவம் தான் என்னுடைய இந்த பதிவு... அந்த ஒரு நாள்..?????
06 செப்டம்பர் 2006...
ஊரில் மாமாவின் (அப்பாவின் அக்கா கணவர்) உடல்நிலை மோசமாக உள்ளதாக வந்த தகவலையடுத்து என்னிடம் கூட சொல்லாமல் (சகோதர பாசம்!), இரவில் திடீரென்று ஊருக்கு கிளம்பிவிட்டார்.
பொழுதும் விடிந்தது... புதன் பிறந்தது (07 செப்டம்பர்)
காலையிலேயே ஊரிலிருந்து போன்: "மாமா இறந்துவிட்டார்? அப்பாவை வர சொல்லவும் என்று?" அப்பாதான் நேற்று இரவே கிளம்பிவிட்டாரே ... இன்னுமா போய் சேரவில்லை??
அப்பா எங்கே? .... மதியம் நான் வேலைக்கு கிளம்பும் வரை அவரை பற்றிய தகவல் எதுவும் வரவில்லை.. சரி சக்கரை நோயாளி ... அடிக்கடி மயக்கம் வேறு வரும். . வழியில் ஓய்வு எடுத்துவிட்டு ஊருக்கு போவார் என்று நினைத்த வேளையில் எனக்கு தொலைபேசி அழைப்பு. நாங்கள் ........... மருத்துவமனையில் இருந்து கூப்பிடுகிறோம். உங்களது அப்பா தரையில் விழுந்து (பயங்கரமாக?) அடிபட்டு உள்ளதாகவும், உடனே கிளம்பி வரவும் என்றது.
இரவோடு இரவாக நானும் ஊருக்கு கிளம்பினேன். குறிப்பிட்ட அந்த மருத்துவமனைக்கு சென்று அப்பாவை பார்த்தேன்..... I.C.U. கண்ணாடி கதவின் வழியாக!
அய்யோ அப்பா...............
அவரது உடலே இரணமாகி இருந்தது (பார்த்த என் மனதும் தான்). டாக்டரிடம் சென்று விசாரித்தேன். மூளையில் அடைப்பு உள்ளது, சில லட்சங்கள் ஆகும் என்றார். (என்னிடம் லட்சியங்கள் தானே உள்ளது: லட்சத்துக்கு எங்கே போவேன்)
ஊரிலோ மாமாவின் மரணம்... மருத்துவமனையிலோ அப்பாவின் மரண போராட்டம்...
டாக்டரிடம், நான் சென்னையிலே அப்பாவை பார்த்துக்கொள்கிறேன் என்றேன். ரூ.22,000 (ஒரு நாள் மருத்துவமனை செலவு) சொந்தங்களிடம் கடன் வாங்கி செலுத்தினேன்.
அன்று மதியம் சென்னைக்கு கிளம்பும் முன் ஊருக்குள் சென்று மாமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன்......
க்க்கூஊ .....க்க்கூஊ ... குச்ஹு .... குச்ஹு .... ரயில் கிளம்பியது... (கன்யாகுமரி விரைவு)
பாதி பயணத்தில் அப்பா துடி துடிக்க ஆரம்பித்து விட்டார்... எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. டி.டி ஆர் - இடம் ஓடினேன். இருவரும் ரயிலில் யாரவது டாக்டர் இருக்கிறாரா என்று தேடினோம். தெய்வமாய் ஒருவர் இருந்தார்.... உதவிகள் செய்தார்.
ஆனால், இதற்கு மேல் பயணம் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்? திருச்சி ரயில் நிலையத்துக்கு சொல்லிவிட்டோம். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்றனர்.
மணி நள்ளிரவு 12.45 .... திருச்சி அரசு மருத்துவமனை... பணியிலிருந்த பயிற்சி மருத்துவர்களிடம் போராடி அனுமதி கடிதம் வாங்கி, ரயில் துறை அதிகாரிகளிம் கெஞ்சி அடுத்த ரயிலில் சென்னை கிளம்பினோம். உதவிக்கு யாருமின்றி, எனக்கும் எமனுக்குமான அந்த போராட்ட நேரத்தில் அவர்கள் காட்டிய மனிதாபிமானம் மரணத்திலும் மறக்க முடியாதது..
இருப்பினும் காலதேவனை எங்களால் நீண்ட காலம் வெல்ல முடியவில்லை.
ஆம்! தோற்று விட்டோம். ( 08 அக்டோபர் 2006)
அம்மா மட்டுமல்ல அப்பாவும் எங்கள் உயிரில், உணர்வில் கலந்துவிட்டார்.
தாயும் தந்தையும் இன்று எங்களுக்கு குழந்தைகள்......
Subscribe to:
Post Comments (Atom)


3 comments:
It was truly tocuhing and I'm sorry for your loss... You are a great writer... Hope to see more of your blogs in the future..
என்ன அழ வைக்குறதுன்னே முடிவு பண்ணிட்டீயா???எப்படி இது மாதிரி வலியெல்லாம் தாங்கிட்டு இருக்கயோ....நான் தான் அதிகம் கவலை படுறேன்னு நினைச்சேன் ஆனா அப்பாவின் மரணத்தை பக்கத்தில் இருந்து அனுபவிக்கும் வலி பெரிது.....
இப்படி வலி ஏற்படுத்துற மாதிரி உன்னோட எழுத்திருக்கு...இன்னும் நிறைய சந்தோஷ நிகழ்வுகளை எழுத வாழ்த்துகள் தோழா....
i'm so touched... very sorry to hear about ur dad. hope his soul rest in peace. :(
may god bless you
Post a Comment