Friday, November 14, 2008
சென்னை சட்டக்கல்லூரி மோதல் -- எனது பார்வை
நீண்ட நாட்களுக்கு (1 வருடம்) பிறகு இரவு பணிக்கு சென்றுவிட்டு அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பிய நான் சென்னை சட்டக்கல்லுரி மாணவர்களிடையேயான மோதலை தொலைக்காட்சியில் காண நேரிட்டது. Animal Planet channel தான் பார்க்கிறோமோ என்று மனப்பிரமை!(?)
இது சென்னை சட்டக்கல்லூரியா அல்லது சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படாத கல்லூரியா??
தமிழ் சினிமா சண்டை காட்சிகளை விட மயிர் கூச்செறிய வைக்கும் அளவுக்கு பிரமாண்டமான, அதேசமயம் பிரமிக்கவைக்கும் நிஜ காட்சிகள்... போலீஸ் பாதுகாப்புடன் (இடையில் வெளி ஆட்கள் புகுந்துவிடகூடாது அல்லவா) தொலைக்காட்சி & பத்திரிக்கை கேமிராக்களுக்கு மத்தியில் நடைப்பெற்ற புனித போர் (jihaath).
இப்பிரச்சினை குறித்த எனது தாழ்மையான கருத்துக்களை இங்கு பதிய விரும்புகிறேன்!!!
1. கல்லூரி நிலவரத்தை முன்னரே அறிந்தும், அதனை கண்டுகொள்ளாமல் இருந்த கல்லூரி முதல்வரும், அந்த கல்லூரி நிர்வாகமும்தான் முதலில் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள்...
விளையும் (நச்சு) பயிரை முளையிலே களைய தவறியது. ஒழுங்கீனமான மாணவர்களை ஆரம்பத்திலேயே ஏன் கட்டுபடுத்தவில்லை?
2. இத்தகைய வன்முறை வெறியை இவர்களுக்குள் விதைத்தது யார்? மனிதர்களை விலங்குகளிடமிருந்து பிரித்துக்காட்டும் பகுத்தறிவை இப்படி ஆயுதங்களை தூக்கி மற்றவர்களை அழிக்கப்பயன்படுத்துவது?
சட்டம் படித்து Criminal lawyer-களாக(வும்) வரவேண்டியவர்கள் இன்று சட்டத்தின் முன் Criminal-களாக நிற்கின்றனர்?
3. குற்றத்தை தடுக்க வேண்டிய காவல் துறை, வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது என்ற குற்றசாட்டை இந்த சம்பவத்தில் நான் ஏற்று கொள்ளமாட்டேன்.
மேலிட உத்தரவு, பொறுப்பற்ற கல்லூரி நிர்வாகம் என்ற இரண்டுக்கும் நடுவில் அவர்கள் இருதலை கொள்ளி எறும்புகள்... நடப்பது மாணவர்களிடையேயான ஒரு வீர விளையாட்டு (????) இதில் எப்படி அவர்கள் குறுக்கிட முடியும் ? கல்லூரி நிர்வாகமோ பிரச்சினையின்போது காவல் துறையை கல்லுரிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
மீறி நுழைந்திருந்தால்.... கல்லூரி வளாகத்துக்குள் போலீஸ் அராஜகம்! மாணவர்கள் மீது தடியடி! தமிழகம் முழுதும் மாணவர்கள் கொந்தளிப்பு! வகுப்பு புறகணிப்பு போராட்டம்! --- என பிரச்சினையே வேறு மாதிரி திசை மாறி இருந்திருக்கும் என்பதை உங்களால் மறுக்க முடியுமா????????
வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம்! குறைந்தபட்சம் வானை நோக்கி சுட்டாவது நிலைமையை கட்டுப்படுத்திருக்கலாம்??! அதற்கும் மேலிட அனுமதி கிடைத்திருக்காது போலும் (கள்ள துப்பாக்கி வைத்து கலவரத்தைக் கட்டுப்படுத்த அவர்களென்ன சாமி படத்தில் வரும் விக்ரமா??)
" மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி" - என்பதுதான் அவர்களின் இன்றைய பரிதாபநிலை!!!
4. இதனை தொடர்ந்து மாநிலத்தின் இதர சட்டக்கல்லூரிகளில் நடந்தேறிய சம்பவங்கள் (கோவை) ... வார்த்தைகளால் விவரிக்க முடியாத கேவலம்!!!!
தங்கள் கல்லூரி வகுப்பறைகளை உடைத்து துவம்சம் செய்கின்றனர்... (என்ன கொடுமை சார் இது)
பால் புகட்டிய அன்னையின் மார்.... மன்னிக்க வேண்டும்! இந்நிகழ்வுகளுக்காக என்னை இழிவுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை...
5. விசாரணைக் கமிஷன்.... (என்ன பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல!)
முன்னாள் நீதியரசர்களின் தலைமையில் ஆண்டுக்கு சிலமுறை இது போன்ற விசாரணைக் கமிஷன்களை பார்த்து அலுத்து போய்விட்டது.. இதற்காக விசாரணைக் கமிஷனை குறை கூறவில்லை.
இன்னும் , நாடெங்கும் தினசரி இது போன்ற கொடுமைகளும் வன்முறைகளும் தொடர்ந்து ஒரு முடிவிலியாக நடந்து கொண்டுதானே இருக்கின்றன என்ற ஆதங்கம்தான்!!!!!!>>>>>>>?????????
Monday, October 27, 2008
எங்கே போய் கொண்டிருக்கிறோம்???

சென்ற வாரம் என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கி தனது வலது கையை இழந்து சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடவுளின் அனுஹிரகத்தால் நல்ல படியாக குணமாகிவரும் அவரை பைக்கில் சென்று நானும் மற்றொரு நண்பரும் பார்த்துவிட்டு, அப்படியே வழியில் (தி. நகர்) ஷாப்பிங் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நல்ல மழை! (ஹ்ம்ம்.... சென்னையிலும் ஒரு மழை காலம்?)
வண்டியை (அதாங்க நம்ம தேசத்தின் உயிர் துடிப்புனு டிவியில இந்திய அணி கிரிகெட் விளையாடும்போது அடிக்கடி விளம்பரம் போடுவாங்களே அந்த வண்டி தான்) தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓரம் கட்டிவிட்டு, மாமழையின் அழகை ரசித்து கொண்டிருந்த வேளையில்தான் அந்த கொடுமையை காண நேரிட்டது...????????
சற்று தூரத்தில்... நட்ட நடு சாலையில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்??? இரயில் பயணத்திற்காகவும், மழைக்காகவும் அங்கு நின்றுகொண்டிருந்த கூட்டத்தில் ஒருவருக்கு கூட அவருக்கு என்ன ஆயிற்று என்று கவனிக்கக்கூட மனமில்லை! (அந்த மாமழையாலும் அவர்களின் கல் மனதை கரைக்க முடியவில்லை போலும்? கண்ணீர் விட்டு கரைந்து கொண்டே இருக்கிறது!!!!!)
"சாலையோர மின்சாரக் கம்பத்தில் பட்டு
விழுந்து இறந்துபோன
ஏதோ ஒரு காக்கைக்காய்…
பல நூறு காக்கைகள்
அந்த இடத்தில் ஒன்றாய் கூடி
ஓயாமல் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கின்றன
யார் விரட்டியும் பறக்காமல்…
அதே மின்கம்பத்தில் இருந்து
வழுக்கி விழுந்து
இறந்துபோன சூசையை…
நின்று பார்க்ககூட
ஏனோ நேரமில்லை
மனமுமில்லை நமக்கு…
நட்டநடு சாலையில்
சட்டென ஓடிவந்து
வண்டிக்கிடையில் சிக்கி
சிதைந்துபோன நாயின்மேல்…
கூசாமல் மேலும் மேலும்
வண்டிகளை ஏற்றி
கடந்துபோகும் மனிதர்கள்…
கூடிய விரைவில்
சக மனிதர்களின் உடல்கள் மீதும்
வண்டிகளை ஏற்றி
தங்கள் பயணத்தை தொடர்ந்தால்
ஆச்சர்யப்படுவதற்க்கில்லை !
தினம் தினம்
புறப்பட காத்திருக்கும்
பேருந்து நிலையத்திலேயே…
நடக்க தெம்பின்றி
அங்கேயே தங்கி
பசியோடு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த
அந்த ஒல்லிக் கிழவன்…
இன்று அனாதையாய்
இறந்து கிடப்பதற்க்காய்
கொஞ்சம்கூட வருத்தமின்றி…
மூக்கைப் பொத்தி
அருவருப்போடு நாம்
நகர்ந்து நிற்கும் பொழுதில்தான்…
முழுதாய் நாறத் தொடங்குகிறது
நமது மனிதாபிமானம்!"
- (எங்கோ படித்த இந்த கவிதை, சட்டென்று தேவையில்லாமல் மனதில் கானல் நீராய் தோன்றி மறைந்தது)
மனதை எதோ நெருடியது போன்ற உணர்வு? நண்பனை துணைக்கு
அழைத்தேன். ஆளு செம மட்டை (போதை) போலிருக்கு, தன்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டான்.நண்பனே முடியாது என்றபோது வேறு யாரையும் எதிர்பார்க்க நினைப்பது மடத்தனம். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அவரருகில் சென்றேன். கனமழையிலும் சுயநினைவின்றி கிடந்த அவரை தட்டி எழுப்பினேன்.
ம்ம்ம்ஹும்... ஆள் எழுந்திரிக்கவில்லை. மனதினுள் பயம் குடியேறியது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல தூக்கினேன். யப்பா!! செம கப்பு... (நண்பன் சொன்னது சரிதான்) இழுத்து (தூக்க முடியவில்லை) நடைபாதையின் ஓரமாக உட்கார வைத்தேன். வந்ததே கோபம்... திட்டிவிட்டேன்?! போதையிலும் எதோ காரணம் சொல்ல முயன்றார். எனக்குதான் புரியவில்லை... புரிந்துகொள்ளவும் மனமில்லை.
குடித்துவிட்டு இப்படி ரோட்டில் நடு கிடந்தால் என்னவாகும்? கார், லாரி என ஏதாவது உன் மேல் ஏறி விட்டால், உன்னையே நம்பியிருக்கும் உன் மனைவி, குழந்தைகள், பெற்றோர்களின் நிலை?????????
(எனது சிறு வயதில் இதேபோல் ஒரு சம்பவம் : சற்று நடுத்தர மனிதர் ஒருவர் இப்படிதான் தெருவில் விழுந்து கிடந்தார். அனைவரும் போதை மயக்கம் என்று விலகி சென்றபோது என்னோட அப்பா அருகில் சென்று தண்ணீர் தெளித்து எழுப்பியபோது தான் தெரிந்தது. அது போதை மயக்கமல்ல. குறைந்த இரத்த அழுத்ததால் (LOW B.P.) வந்த மயக்கம் என்று)
விழுந்து இறந்துபோன
ஏதோ ஒரு காக்கைக்காய்…
பல நூறு காக்கைகள்
அந்த இடத்தில் ஒன்றாய் கூடி
ஓயாமல் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கின்றன
யார் விரட்டியும் பறக்காமல்…
அதே மின்கம்பத்தில் இருந்து
வழுக்கி விழுந்து
இறந்துபோன சூசையை…
நின்று பார்க்ககூட
ஏனோ நேரமில்லை
மனமுமில்லை நமக்கு…
நட்டநடு சாலையில்
சட்டென ஓடிவந்து
வண்டிக்கிடையில் சிக்கி
சிதைந்துபோன நாயின்மேல்…
கூசாமல் மேலும் மேலும்
வண்டிகளை ஏற்றி
கடந்துபோகும் மனிதர்கள்…
கூடிய விரைவில்
சக மனிதர்களின் உடல்கள் மீதும்
வண்டிகளை ஏற்றி
தங்கள் பயணத்தை தொடர்ந்தால்
ஆச்சர்யப்படுவதற்க்கில்லை !
தினம் தினம்
புறப்பட காத்திருக்கும்
பேருந்து நிலையத்திலேயே…
நடக்க தெம்பின்றி
அங்கேயே தங்கி
பசியோடு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த
அந்த ஒல்லிக் கிழவன்…
இன்று அனாதையாய்
இறந்து கிடப்பதற்க்காய்
கொஞ்சம்கூட வருத்தமின்றி…
மூக்கைப் பொத்தி
அருவருப்போடு நாம்
நகர்ந்து நிற்கும் பொழுதில்தான்…
முழுதாய் நாறத் தொடங்குகிறது
நமது மனிதாபிமானம்!"
- (எங்கோ படித்த இந்த கவிதை, சட்டென்று தேவையில்லாமல் மனதில் கானல் நீராய் தோன்றி மறைந்தது)
மனதை எதோ நெருடியது போன்ற உணர்வு? நண்பனை துணைக்கு
அழைத்தேன். ஆளு செம மட்டை (போதை) போலிருக்கு, தன்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டான்.நண்பனே முடியாது என்றபோது வேறு யாரையும் எதிர்பார்க்க நினைப்பது மடத்தனம். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அவரருகில் சென்றேன். கனமழையிலும் சுயநினைவின்றி கிடந்த அவரை தட்டி எழுப்பினேன்.
ம்ம்ம்ஹும்... ஆள் எழுந்திரிக்கவில்லை. மனதினுள் பயம் குடியேறியது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல தூக்கினேன். யப்பா!! செம கப்பு... (நண்பன் சொன்னது சரிதான்) இழுத்து (தூக்க முடியவில்லை) நடைபாதையின் ஓரமாக உட்கார வைத்தேன். வந்ததே கோபம்... திட்டிவிட்டேன்?! போதையிலும் எதோ காரணம் சொல்ல முயன்றார். எனக்குதான் புரியவில்லை... புரிந்துகொள்ளவும் மனமில்லை.
குடித்துவிட்டு இப்படி ரோட்டில் நடு கிடந்தால் என்னவாகும்? கார், லாரி என ஏதாவது உன் மேல் ஏறி விட்டால், உன்னையே நம்பியிருக்கும் உன் மனைவி, குழந்தைகள், பெற்றோர்களின் நிலை?????????
குடி.. ஆனால் அந்த குடி உன் குடும்பத்தைஅழிக்காமல் பார்த்துக்கொள்!
(எனது சிறு வயதில் இதேபோல் ஒரு சம்பவம் : சற்று நடுத்தர மனிதர் ஒருவர் இப்படிதான் தெருவில் விழுந்து கிடந்தார். அனைவரும் போதை மயக்கம் என்று விலகி சென்றபோது என்னோட அப்பா அருகில் சென்று தண்ணீர் தெளித்து எழுப்பியபோது தான் தெரிந்தது. அது போதை மயக்கமல்ல. குறைந்த இரத்த அழுத்ததால் (LOW B.P.) வந்த மயக்கம் என்று)
Sunday, September 21, 2008
orkut

Where the New Relat!onsh!p Begins....
I L♥ve Orkut...
(It makes my days beautiful on this days) ☺
நட்பின் புதிய மொழி....!
இதயங்கள் இணையும் சங்கமம்...!
இனிய உறவுகளின் உறைவிடம்...!
எங்கோ பிறந்தோம்! எங்கோ எங்கோ வளர்ந்தோம்!
இங்கே சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால சிந்தித்துக கொண்டோம்!
முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை!
எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை!
அவரவர் கருத்துக்களை இடம் மாற்றிக் கொள்வோம்!
பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம்!
சீக்கிரத்திலேயே சமாதானத்திற்கு வருவோம்!
இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்!
உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க நம்பிக்கை தருவோம்!
நன்மைகள் வளர முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்து சாதிப்போம்......
(It makes my days beautiful on this days) ☺
நட்பின் புதிய மொழி....!
இதயங்கள் இணையும் சங்கமம்...!
இனிய உறவுகளின் உறைவிடம்...!
எங்கோ பிறந்தோம்! எங்கோ எங்கோ வளர்ந்தோம்!
இங்கே சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால சிந்தித்துக கொண்டோம்!
முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை!
எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை!
அவரவர் கருத்துக்களை இடம் மாற்றிக் கொள்வோம்!
பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம்!
சீக்கிரத்திலேயே சமாதானத்திற்கு வருவோம்!
இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்!
உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க நம்பிக்கை தருவோம்!
நன்மைகள் வளர முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்து சாதிப்போம்......
ரயில் பயணங்களில்....
நீங்கள் இதுவரை எத்தனையோ முறை ரயிலில் பயணம் செய்திருப்பிர்கள், சில இனிய உறவுகளுடன் (மனைவி, குழந்தைகள், நட்பு, காதல் என).... நானும் தான்!
என் தந்தையுடன் இறுதியாக நான் மேற்கொண்ட அந்த ஒரு ரயில் பயணம் பற்றிய அனுபவம் தான் என்னுடைய இந்த பதிவு... அந்த ஒரு நாள்..?????
06 செப்டம்பர் 2006...
ஊரில் மாமாவின் (அப்பாவின் அக்கா கணவர்) உடல்நிலை மோசமாக உள்ளதாக வந்த தகவலையடுத்து என்னிடம் கூட சொல்லாமல் (சகோதர பாசம்!), இரவில் திடீரென்று ஊருக்கு கிளம்பிவிட்டார்.
பொழுதும் விடிந்தது... புதன் பிறந்தது (07 செப்டம்பர்)
காலையிலேயே ஊரிலிருந்து போன்: "மாமா இறந்துவிட்டார்? அப்பாவை வர சொல்லவும் என்று?" அப்பாதான் நேற்று இரவே கிளம்பிவிட்டாரே ... இன்னுமா போய் சேரவில்லை??
அப்பா எங்கே? .... மதியம் நான் வேலைக்கு கிளம்பும் வரை அவரை பற்றிய தகவல் எதுவும் வரவில்லை.. சரி சக்கரை நோயாளி ... அடிக்கடி மயக்கம் வேறு வரும். . வழியில் ஓய்வு எடுத்துவிட்டு ஊருக்கு போவார் என்று நினைத்த வேளையில் எனக்கு தொலைபேசி அழைப்பு. நாங்கள் ........... மருத்துவமனையில் இருந்து கூப்பிடுகிறோம். உங்களது அப்பா தரையில் விழுந்து (பயங்கரமாக?) அடிபட்டு உள்ளதாகவும், உடனே கிளம்பி வரவும் என்றது.
இரவோடு இரவாக நானும் ஊருக்கு கிளம்பினேன். குறிப்பிட்ட அந்த மருத்துவமனைக்கு சென்று அப்பாவை பார்த்தேன்..... I.C.U. கண்ணாடி கதவின் வழியாக!
அய்யோ அப்பா...............
அவரது உடலே இரணமாகி இருந்தது (பார்த்த என் மனதும் தான்). டாக்டரிடம் சென்று விசாரித்தேன். மூளையில் அடைப்பு உள்ளது, சில லட்சங்கள் ஆகும் என்றார். (என்னிடம் லட்சியங்கள் தானே உள்ளது: லட்சத்துக்கு எங்கே போவேன்)
ஊரிலோ மாமாவின் மரணம்... மருத்துவமனையிலோ அப்பாவின் மரண போராட்டம்...
டாக்டரிடம், நான் சென்னையிலே அப்பாவை பார்த்துக்கொள்கிறேன் என்றேன். ரூ.22,000 (ஒரு நாள் மருத்துவமனை செலவு) சொந்தங்களிடம் கடன் வாங்கி செலுத்தினேன்.
அன்று மதியம் சென்னைக்கு கிளம்பும் முன் ஊருக்குள் சென்று மாமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன்......
க்க்கூஊ .....க்க்கூஊ ... குச்ஹு .... குச்ஹு .... ரயில் கிளம்பியது... (கன்யாகுமரி விரைவு)
பாதி பயணத்தில் அப்பா துடி துடிக்க ஆரம்பித்து விட்டார்... எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. டி.டி ஆர் - இடம் ஓடினேன். இருவரும் ரயிலில் யாரவது டாக்டர் இருக்கிறாரா என்று தேடினோம். தெய்வமாய் ஒருவர் இருந்தார்.... உதவிகள் செய்தார்.
ஆனால், இதற்கு மேல் பயணம் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்? திருச்சி ரயில் நிலையத்துக்கு சொல்லிவிட்டோம். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்றனர்.
மணி நள்ளிரவு 12.45 .... திருச்சி அரசு மருத்துவமனை... பணியிலிருந்த பயிற்சி மருத்துவர்களிடம் போராடி அனுமதி கடிதம் வாங்கி, ரயில் துறை அதிகாரிகளிம் கெஞ்சி அடுத்த ரயிலில் சென்னை கிளம்பினோம். உதவிக்கு யாருமின்றி, எனக்கும் எமனுக்குமான அந்த போராட்ட நேரத்தில் அவர்கள் காட்டிய மனிதாபிமானம் மரணத்திலும் மறக்க முடியாதது..
இருப்பினும் காலதேவனை எங்களால் நீண்ட காலம் வெல்ல முடியவில்லை.
ஆம்! தோற்று விட்டோம். ( 08 அக்டோபர் 2006)
அம்மா மட்டுமல்ல அப்பாவும் எங்கள் உயிரில், உணர்வில் கலந்துவிட்டார்.
தாயும் தந்தையும் இன்று எங்களுக்கு குழந்தைகள்......
Saturday, September 20, 2008
என்னை தங்கள் கருவில் சுமந்து, இந்த மண்ணில் விதைத்த நல்ல உள்ளங்கள்.. அன்பான இதயங்கள்..!!
| 24 மே 2005: |
| என் வாழ்க்கை பயணத்தின் பாதைகள் திசை மாறிய நாள்......!!!!!!!!!!!!!!!!!!!! |
| அப்பாவின் அவசர தொலைபேசி அழைப்பை ஏற்று இரவில் வேலையை விட்டு அவசரமாக வீடு திரும்பிய நான் கண்டது என் அன்பு அம்மாவின் மரணத்தை..... என்னை வேலைக்கு அனுப்பிவிட்ட அம்மா சில மணிகளில் தன் வாழ்கையை முடித்துக்கொண்டார். அழுதேன்... புரண்டேன்...தட்டு தடுமாறி மெல்ல மெல்ல சுதரித்துகொண்டு வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கும்போது... புயலுக்கு பின் பூகம்பம்... |
| 08-அக்டோபர்-06: |
| என் தந்தையின் மரணம்??????.... அம்மாவின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள் தவித்துக்கொண்டு, எனக்கு மற்றொரு அம்மாவாக மாறி வாழ்ந்த என் அப்பா என் மடியிலேயே உயிர் விட்ட அந்த தருணத்தை நினத்தாலே பதறுகிறது என் மனது....! |
| இந்த இடைப்பட்ட காலத்தில் நான் கற்று கொண்ட பாடங்கள் ஏராளம்... யார் உண்மையான நட்பு, நண்பர்கள், சொந்தம் என அனைவரை பற்றியும் புரிந்துகொள்ள அவர்களின் மரணம் இறைவனுக்கு காணிக்கை!!!!!!! |
| " ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! " |
| |
| நான் இழந்தது பெற்றோர்களை மட்டுமல்ல; அவர்களின் அன்பு, நட்பு பாராட்டும் மனிதத்துவம், அனைவரையும் சொந்தமாய் பாவிக்கும் மனோபாவம் என பல நல்ல விஷயங்கள்... |
Subscribe to:
Posts (Atom)




