என்னை தங்கள் கருவில் சுமந்து, இந்த மண்ணில் விதைத்த நல்ல உள்ளங்கள்.. அன்பான இதயங்கள்..!!
| 24 மே 2005: |
| என் வாழ்க்கை பயணத்தின் பாதைகள் திசை மாறிய நாள்......!!!!!!!!!!!!!!!!!!!! |
| அப்பாவின் அவசர தொலைபேசி அழைப்பை ஏற்று இரவில் வேலையை விட்டு அவசரமாக வீடு திரும்பிய நான் கண்டது என் அன்பு அம்மாவின் மரணத்தை..... என்னை வேலைக்கு அனுப்பிவிட்ட அம்மா சில மணிகளில் தன் வாழ்கையை முடித்துக்கொண்டார். அழுதேன்... புரண்டேன்...தட்டு தடுமாறி மெல்ல மெல்ல சுதரித்துகொண்டு வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கும்போது... புயலுக்கு பின் பூகம்பம்... |
| 08-அக்டோபர்-06: |
| என் தந்தையின் மரணம்??????.... அம்மாவின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள் தவித்துக்கொண்டு, எனக்கு மற்றொரு அம்மாவாக மாறி வாழ்ந்த என் அப்பா என் மடியிலேயே உயிர் விட்ட அந்த தருணத்தை நினத்தாலே பதறுகிறது என் மனது....! |
| இந்த இடைப்பட்ட காலத்தில் நான் கற்று கொண்ட பாடங்கள் ஏராளம்... யார் உண்மையான நட்பு, நண்பர்கள், சொந்தம் என அனைவரை பற்றியும் புரிந்துகொள்ள அவர்களின் மரணம் இறைவனுக்கு காணிக்கை!!!!!!! |
| " ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! " |
| |
| நான் இழந்தது பெற்றோர்களை மட்டுமல்ல; அவர்களின் அன்பு, நட்பு பாராட்டும் மனிதத்துவம், அனைவரையும் சொந்தமாய் பாவிக்கும் மனோபாவம் என பல நல்ல விஷயங்கள்... |


2 comments:
அப்பா அம்மா அழகா இருக்காங்க முபா... :-)
கோடுகளும் சித்திரங்களே
SAROJINI KANTHAS·
என்பாதங்களுக்குக் கீழே
பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை
முட்களே.
எனினும்
ரத்தம் துடைத்து
நடந்து வந்தேன்.
என்னைத்
தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த
தென்றல் அல்ல
நுரையீரல்களை -
கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும்
கந்தகக்காற்று
இருந்தும்
சுடச்சுடவே
நான்
சுவாசித்து வந்தேன்
ஆண்டு முழுவதும் இருந்த
அக்கினி நட்சத்திரத்தில்
எரிந்து போயிற்று
எனது குடை
ஆயினும்
என்
நிழலின் நிழலிலேயே
நீண்டதூரம் ஒதுங்கிவந்தேன்
என்
தலைக்கு மேலே
பருந்துகள் எப்போதும்
பறந்துகொண்டிருந்ததால்
நான் இன்னும்
செத்துவிடவில்லை
என்பதை
நித்தம் நித்தம்
நிருபிக்க வேண்டியதாயிற்று
என் நிர்வாணத்தை
ஒரு கையால்
மறைத்துக்கொண்டு
என்
அடுத்த கையால்
ஆடை நெய்து
அணிந்து கொண்டேன்
இன்று-
என்
பிரவாகம் கண்டு கரைகள்
பிரமிக்கலாம்
ஆனால் -
இந்த நதி
பாலைவனப் பாறைகளின்
இடுக்கில் கசிந்துதான்
இறங்கி வந்தது
தனது
சொந்தக் கண்ணீரும்
சுரந்ததால்
இரட்டிப்பானது
இந்த நதி
இந்த விதை
தன்மேல் கிடந்த
பாறைகளை
முட்டி முட்டியே
முளைத்துவிட்டது
இன்று என்
புண்களை மூடும்
பூக்களினால்
நான்
சமாதானம் அடைவது
சாத்தியமில்லை
இந்தச்
சமூக அமைப்பு
எனக்குச்
சம்மதமில்லை
சரிதம் என்பது
தனி ஒரு
மனிதனின்
அறிமுக அட்டையோ...?
அல்ல
அது
முடிவைத்தேடும்
ஒரு சமூகத்தின்
மொத்த விலாசம்
இதுவோ...
ரணத்தோடு வாசித்த
சங்கீதம்...
எனது
ஞாபக நீரோடையின்
சலசலப்பு...
நசுங்கிய
நம்பிக்கைகளுக்கு
என்
பேனாவிலிருந்தொரு
ரத்ததானம்
இதில்
சில நிஜங்களைச்
சொல்லவில்லை என்பது
நிஜம்.
ஆனால் -
சொன்னதெல்லாம் நிஜம்
நான்
வரைய நினைத்தது
சித்திரம்தான்.
வந்திருப்பவை என்னவோ
கோடுகளே
ஆனாலும் -
கோடுகளும்
சித்திரங்களே!
மனித நேசம்தான்
வாழ்க்கை என்பதை
அறிய வந்தபோது
என்
முதுகில் கனக்கிறது
இன்னொரு சுமை..
இது உனக்கு எனக்கு மட்டும் அல்ல
இந்த மனித சமுதாயத்துக்கே...
Belated words for your past Mourning!!!!!
From: A soul from the other side of the earth..
Post a Comment